தந்தைக்கு விபத்து! குடும்ப வருமானத்திற்காக சோமேட்டோ-வில் டெலிவரி செய்யும் 7 வயது சிறுவன்.. டிரெண்டிங் வீடியோ..!1205055062


தந்தைக்கு விபத்து! குடும்ப வருமானத்திற்காக சோமேட்டோ-வில் டெலிவரி செய்யும் 7 வயது சிறுவன்.. டிரெண்டிங் வீடியோ..!


ராகுல் மிட்டல் என்ற ட்விட்டர் பயனாளி 7 வயது சிறுவன் தனது உணவை டெலிவரி செய்ய வந்தபோது அவர் சிறுவனின் கதையை கேட்கிறார். அப்போது அந்த சிறுவன் தனது தந்தை சமீபத்தில் விபத்துக்குள்ளாகி காலில் காயம் ஏற்பட்டு இருப்பதால் குடும்ப வருமானத்திற்காக தான் இந்த பணியை செய்து வருவதாக கூறியுள்ளார்.

பகலில் பள்ளிக்கு செல்வதாகவும், மாலை வீட்டுக்கு வந்தவுடன் 6 மணியிலிருந்து இரவு 11 மணி வரை சோமேட்டோ வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருவதாகவும் அந்த சிறுவன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

ராகுல் மிட்டல் பகிர்ந்த இந்த வீடியோவில் அந்த சிறுவன் ஒரு கையில் உணவு பேக்கேஜ் உடன் இன்னொரு கையில் தொலைபேசி வைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது. மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை சைக்கிள் மூலமே சிறுவன் டெலிவரி செய்து வருவதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்

இதனை அடுத்து ராகுல் மிட்டல் தனது ட்விட்டர் பக்கத்தில் சிறுவயதிலேயே குடும்ப பொறுப்பை ஏற்ற இந்த சிறுவனை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அதுமட்டுமின்றி இந்த சிறுவனின் தந்தையின் கால் குணமாக நாம் அனைவரும் சேர்ந்து உதவி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

டுவிட்டரில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர். பலர் அந்த சிறுவனின் குடும்ப பொறுப்பு தன்மையை பாராட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒருசிலர் இந்த வயதில் அந்த சிறுவனுக்கு ஏற்பட்ட சோகத்தை நினைத்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மேலும் பலர் அந்த சிறுவனின் தந்தையின் விவரங்களை தங்களுக்கு பகிருமாறும், தங்களால் முடிந்த உதவியை செய்கிறோம் என்றும் வாக்குறுதி அளித்துள்ளனர் இந்த சிறுவனின் வீடியோவுக்கு சோமேட்டோ நிறுவனமும் ரெஸ்பான்ஸ் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த வீடியோவை அடுத்த சில நாட்களில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் மாற்றுத்திறனாளி ஒருவர் உணவு டெலிவரி செய்யும் வீடியோவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது. குடும்ப பொறுப்பை ஏற்று கொள்வதற்காக சிறுவர்களும் மாற்றுத்திறனாளிகளும் செய்யும் வேலை குறித்த இந்த பதிவுகள் அனைவருக்குமான ஊக்கமூட்டும் செய்திகளாக பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog