Posts

Showing posts with the label #A | #Reg | #Dagger | #A

இதுதான் சரியான நேரம்! அதிரடியாக குறைந்த தங்கம் விலை!1406188590

Image
இதுதான் சரியான நேரம்! அதிரடியாக குறைந்த தங்கம் விலை! சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.520 குறைந்து விற்பனையாகிறது.   தங்கம் விலை  அவ்வப்போது எதிர்பாராத வகையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து  வருவது வழக்கமான ஒன்றுதான்..  ஆனால் அண்மைக்காலமாக  ஒரு நாள் தங்கம் விலை  அதிரடி மாற்றங்களை சந்தித்து வருகிறது.   ஒரு நாள்  தங்கத்தின் விலை குறைக்கப்பட்டாலும், அடுத்தடுத்த  நாட்களில்  அதிகளவில் உயர்த்தப்படுகிறது.   ஜூன் மாதம் இறுதியில் தொடர்ந்து சரிவை சந்தித்து சவரன் ரூ. 30 ஆயிரத்திற்கும் கீழ் விற்பனையாகி வந்த நிலையில்,  இம்மாத ( ஜூலை)  தொடக்கத்திலே தங்கம் விலை சவரனுக்கு ரூ.856 உயர்ந்து, சவரன் ரூ.38,280 -க்கு விற்பனை செய்யப்பட்டது.  தொடர்ந்து அடுத்த நாளே ( ஜூன் 2) தங்க விலை சவரனுக்கு ரூ.38,336 ஆக அதிகரித்தது. இந்த விலையேற்றம் நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.    பின்னர் கடந்த திங்கள் கிழமை அன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக  144 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன்  38,480 ரூபாய்க்கும் நேற்று ஆபரணத்  ரூ.56 உயர்ந்து, சவரனுக்கு ரூ.38,440-க்