Airtel prepaid plans go up again!-2054724258
ஏர்டெல் ப்ரீபெய்டு திட்டங்களின் விலை மீண்டும் உயர்வு! கடந்த ஆண்டு வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை சற்று உயர்த்தின. இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர், இந்நிலையில் தற்போது இந்த ஆண்டில் மீண்டும் ஏர்டெல் அதன் ப்ரீபெய்டு திட்டங்களின் விலையை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த தகவலை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த முறை ஒரு பயனருக்கு சராசரியாக ரூ.200 ஆக இருக்கும். நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி விட்டல் கூறுகையில், 5 ஜி-க்கான டெலிகாம் ரெகுலேட்டரின் அடிப்படை விலையில் ஏர்டெல் திருப்தி அடையவில்லை. நிறுவனத்தினர் விலையை கணிசமாக குறைக்க விரும்பினர், அதன்படி விலை குறைக்கப்பட்டபோதிலும் அது போதுமானதாக இல்லை மற்றும் அது நிறுவனத்திற்கு ஏமாற்றத்தையே அளித்தது என்று தெரிவித்தார். கடந்த ஆண்டு தனியாருக்குச் சொந்தமான மூன்று டெலிகாம் ஆபரேட்டர்களும் அவர்களின் ரீசார்ஜ் திட்ட விலைகளை கிட்டத்தட்ட 18 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தினர். 5ஜி ரிவர்ஸ் வ...