Posts

Showing posts with the label #JEEexam

தேர்வுகளுக்கான தேதி மாற்றம்\" - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Image
தேர்வுகளுக்கான தேதி மாற்றம்\" - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு! ஜேஇஇ முதன்மை தேர்வுகளுக்கான தேதி மாற்றம்" - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!  ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இரண்டு கட்டங்களாக இந்த தேர்வுகள் நடைபெற இருந்த நிலையில், தற்போது ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மாதங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல்கட்ட முதன்மை தேர்வுகள் ஜூன் 20 லிருந்து 29 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், 2ம் கட்ட தேர்வுகள் ஜூலை 21லிருந்து 30 தேதிகள் வரை நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, முதற்கட்ட முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்த விவரங்களை www.nta.ac.in மற்றும் http://Jeemain.nta.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் தேர்வர்கள் விவரங்களை அறிந்து கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.