இந்திய கடற்படையில் பணிபுரிய அருமையான வாய்ப்பு - 12ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்1080048977
இந்திய கடற்படையில் பணிபுரிய அருமையான வாய்ப்பு - 12ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் இந்திய கடற்படையில் பணிபுரிய தகுதி உள்ள இளைஞர்களுக்கு மத்திய அரசு அக்னிபத் திட்டத்தின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபத் திட்டம் இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய மூன்று படைகளிலும் 4 ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள், இளம்பெண்களை சேர்க்கும் திட்டம் ஆகும். பணியில் சேர்வதற்கு முன்பு 6 மாத காலத்திற்கு பயிற்சி வழங்கப்படும். 10ம், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 17.05 முதல் 21 வயதுடைய ஆண், பெண் இருபாலரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். ராணுவத்தில் சேருவதற்கு தற்போது நிர்ணயிக்கப்பட்டிருக்கும் உடற்தகுதிகளே அக்னிபத் திட்டத்திற்கும் பொருந்தும். அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமான படையில் சேர ஜூன் 24 முதல் விண்ணப்ப பதிவு தொடங்கியது. ஜூலை 5ம் தேதி வரை தகுதி உடைய இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான முதற்கட்ட ஆன்லைன் தேர்வு ஜூலை மாதம் 24ம் தேதி தொடங்க உள்ளது. 4 ஆண்டுகள் நிறைவு செய்து வெளியே வரும் அக்ன...