இந்திய கடற்படையில் பணிபுரிய அருமையான வாய்ப்பு - 12ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்1080048977


இந்திய கடற்படையில் பணிபுரிய அருமையான வாய்ப்பு - 12ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்


இந்திய கடற்படையில் பணிபுரிய தகுதி உள்ள இளைஞர்களுக்கு மத்திய அரசு அக்னிபத் திட்டத்தின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபத் திட்டம் இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய மூன்று படைகளிலும் 4 ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர்கள், இளம்பெண்களை சேர்க்கும் திட்டம் ஆகும். பணியில் சேர்வதற்கு முன்பு 6 மாத காலத்திற்கு பயிற்சி வழங்கப்படும்.

10ம்,  12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 17.05 முதல் 21 வயதுடைய ஆண், பெண் இருபாலரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். ராணுவத்தில் சேருவதற்கு தற்போது நிர்ணயிக்கப்பட்டிருக்கும் உடற்தகுதிகளே அக்னிபத் திட்டத்திற்கும் பொருந்தும். அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமான படையில் சேர ஜூன் 24 முதல் விண்ணப்ப பதிவு தொடங்கியது.

ஜூலை 5ம் தேதி வரை தகுதி உடைய இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான முதற்கட்ட ஆன்லைன் தேர்வு ஜூலை மாதம் 24ம் தேதி தொடங்க உள்ளது. 4 ஆண்டுகள் நிறைவு செய்து வெளியே வரும் அக்னி வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறையில் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

மேலும் நான்கு ஆண்டு ராணுவ பணி முடித்து வெளிவரும் அக்னி வீரர்களுக்கு தங்கள் நிறுவனத்தில் வேலை தரப்படும் என , மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்தார் , ஆர்பிஜி குழுமத் தலைவர் ஹர்ஷ் கோயங்கா , பயோகான் தலைவர் கிரண் மஜும்தார் ஷா , அப்பல்லோ மருத்துவமனை, டிவிஎஸ் குழும நிறுவனங்களும் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

இதனிடையே அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையில் சேருவதற்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும் எனும் தேதி வெளியாகி உள்ளது. அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய கடற்படை ஆட்சேர்ப்புக்கு, அக்னிவீர் எஸ்.எஸ்.ஆர் மற்றும் அக்னிவீர் எம்.ஆர் பதவிகளுக்கு ஜூலை 1, 2022 முதல் அக்னிவீரர்கள் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.

அக்னிவீருக்கான ஆன்லைன் பதிவு joinindiannavy.gov.in எனும் இணையத்தளத்தில் தொடங்கும்.

இதே போன்று இந்திய ராணுவத்தில் அக்னிபத் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க செயல்முறை அடுத்த மாதம் ஜூலையில் தொடங்கும்.

Comments

Popular posts from this blog

Family Prayer Bundle

White Chicken Chili