என்னது மீண்டும் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போடறாரா பூஜா ஹெக்டே?... சூப்பர்தான் போங்க!

என்னது மீண்டும் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போடறாரா பூஜா ஹெக்டே?... சூப்பர்தான் போங்க!
நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்துள்ளார். இந்தியிலும் முக்கியமான படங்களை நடித்து அங்கும் சிறப்பான நாயகியாக மாறி வருகிறார்.
தெலுங்கில் மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன் போன்ற முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள பூஜா, சமீபத்தில் வெளியான ராதே ஷ்யாம் படத்தில் பிரபாசுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இந்தப் படத்தில் இவர்கள் இருவருக்கிடையிலான கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்ததாக அனைத்து தரப்பினரும் கூறினர்.
தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ஆச்சார்யா படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்துள்ளார் பூஜா ஹெக்டே. இந்தப் படத்தின் மிரட்டலான ட்ரெயிலர் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தமிழிலும் விஜய்யுடன் நடித்து இவரது நடிப்பில் பீஸ்ட் படம் கடந்த 13ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது.
இந்தப் படத்திலும் நடிகர் விஜய்க்கு சிறப்பான ஜோடியாக பூஜா ஹெக்டே பாராட்டுக்குள்ளாகியுள்ளார். விஜய்க்கு இணையான இவரின் நடன அசைவுகள் உள்ளிட்டவை சிறப்பாக பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய படம் முழுவதிலும் ஒரே காஸ்ட்யூமில் வந்தாலும், இவரது அழகு, கவர்ச்சி உள்ளிட்டவை சிறப்பாக அமைந்திருந்தது.
முன்னதாக ராம்சரண் நடிப்பில் தெலுங்கில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்தார் பூஜா ஹெக்டே. இந்தப் பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கும் உள்ளானது. இந்நிலையில் தற்போது மீண்டும் தெலுங்கில் ஒரு பாட்டிற்கு ஆட்டம் போட்டுள்ளார் பூஜா.

தெலுங்கில் விரைவில் வெளியாகவுள்ளத எப்-3 என்ற படத்தில் மீண்டும் ஒரு பாட்டிற்கு ஆட்டம் போடவுள்ளார் பூஜா ஹெக்டே. வெங்கடேஷ் மற்றும் வருண் தேஜ் இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தில் தமன்னா, மெஹ்ரின் பிர்ஷாடா நாயகிகளாக நடித்துள்ளனர். அனில் ரவிபுடி இயக்கத்தில் படம் உருவாகியுள்ளது.
வரும் மே மாதம் 27ம் தேதி இந்தப் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அளவில் முக்கியமான நாயகியாக உள்ள பூஜா ஹெக்டேவை இந்தப் படத்தில் ஆட்டம் போட வைப்பதன் மூலம் படத்தை மேலும் சிறப்பாக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் பாடல் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.
Comments
Post a Comment