இங்கிலாந்தில் சாதனை படைத்த ’காத்து வாக்கு ரெண்டு காதல்’
இங்கிலாந்தில் சாதனை படைத்த ’காத்து வாக்கு ரெண்டு காதல்’ விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அண்மையில் ரிலீஸான திரைப்படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’. ரிலீஸூக்கு முன்பே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. காரணம், நயன்தாரா மற்றும் சமந்தா என இரண்டு முன்னணி ஹீரோயின்கள் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கின்றனர். அதனால் படத்தின் கதை எந்தமாதிரி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இயல்பாகவே இருந்தது. மேலும், விக்னேஷ் சிவன் தான் இயக்குநர். அனிரூத் இசை. இந்தக் கூட்டணியே மாஸாக இருப்பதால் படம் எப்படியும் ஜாலியாகவும், அதேநேரத்தில் சூப்பராகவும் இருக்கும் என எதிர்பார்த்தனர். இந்த எதிர்பார்ப்பை படம் ரிலீஸூக்குப் பிறகு பூர்த்தி செய்ததாக தெரியவில்லை. காதல் படமாக இருந்தாலும், நயன்தாரா மற்றும் சமந்தா என இருவரையும் பேலன்ஸாக இருக்க வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட காட்சி அமைப்புகள் ரசிகர்களை அவ்வளவாக ஈர்க்கவில்லை. கலவையான விமர்சனங்களையே பெற்றுத் தந்தது. வசூல் ரீதியாக பார்க்கும்போது, தமிழகத்தில் ஓரளவுக்கு இருந்தாலும் யு.கேவில் சாதனை படைத்துள்ளது. அகிம்சா எண்டர்டெயின்மென்ட் இப்படத்தை இ...