Posts

Showing posts with the label #goldrate

தங்கம் விலை இன்றும் குறைவு! நிலவரம் என்ன?

தங்கம் விலை இன்றும் குறைவு! நிலவரம் என்ன? உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை இறங்கு முகமாக உள்ளது. 4-வது நாளாக இன்றும் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4796- க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.38368-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.41560-க்கு விற்பனையாகிறது.