தமிழகத்தில் நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை1912376513


தமிழகத்தில் நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை


ஆடி மாதம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் ஆடிப்பூர திருவிழா வருகிற ஆகஸ்டு 1 ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற இருப்பதால் அந்த உகந்த நாளில் அம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பேசியுள்ளார்.

உள்ளூர் விடுமுறை:

உலகை ஆளும் அம்பிகை அவதரித்த தினமாக கொண்டாடப்படும் ஆடிப்பூர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பூரண நட்சத்திரத்தில் அனைத்து அம்மன்களையும் வழிபடும் ஒரு சிறந்த விழாவாக நடைபெற்று வருகிறது. இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள் என்ற உறுதி நம்பிக்கையை கொள்ளும் ஏராளமான பக்தர்கள் கூடி கொண்டாடும் விழாவாக இந்த ஆடிப்பூர திருவிழா உள்ளது.

இவ்வாறு சிறப்பு மிகுந்த இவ்விழா ஆண்டுதோறும் 3 நாட்கள் நடைபெறும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடி மாதம் நடைபெறும் ஆடிபூரா திருவிழா நடைபெறவில்லை. ஆனால் தற்போது ஓரளவு நோயின் தாக்கம் குறைந்துள்ளதால் மீண்டும் இவ்விழாவை தேரோட்டத்துடன் சிறப்பாக நடத்த ஆண்டாள் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட இவ்விழா கடந்த 28 ந் தேதி அன்று கருட சேவை நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

அதன் பிறகு ஜூலை 30 (நேற்று) ஆண்டாள் சயன சேவை நல்ல முறையில் நடந்து முடிந்தது. மேலும், ஆடிப்பூரத்தன்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதி நடைபெற இருக்கிறது. இவ்வாறு ஆண்டாள் கோவிலில் மிகப்பிரமாண்டமாக நடைபெற இருக்கும் தேரோட்டத்தையொட்டி விருதுநகர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 1ல் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், இவ் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 13 ஆம் தேதி பணி நாளாக செயல்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

Family Prayer Bundle

கஞ்சா வியாபாரிகளின் ரூ.2.30 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்- தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் விளக்கம்

White Chicken Chili