ரேஷன் வாங்க ஆதார் எண் போதும்... மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு!


ரேஷன் வாங்க ஆதார் எண் போதும்... மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு!


நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி பியூஷ் கோயல் பேசி போது, நாட்டில் உள்ள 77 கோடி மக்கள் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அரசின் சலுகைகளைப் பெறுவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் இந்த முயற்சி பிரதமர் நரேந்திர மோடியால் கருத்தாக்கப்பட்டது.

இந்த வசதியின் மூலம், புலம்பெயர்ந்த பயனாளி ஒருவர் அவர் பணிபுரியும் இடத்தில் ரேஷன் பெற முடியும், அதே நேரத்தில் அவர் அல்லது அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு திரும்பிய பின் உரிமையுள்ள ரேஷனில் தங்கள் பங்கைப் பெற அனுமதிக்கப்படுகிறார்கள்.

கொரோனா காலத்தில் 19 மாதங்களாக ரேஷன் கடைகளில் ஏழைகளுக்கு கூடுதலாக தலா 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டது. இதனால் யாரும் பட்டினி கிடக்கவில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டது. பிரதமரின் முன்முயற்சியால், தொற்றுநோய்களின் போது ஒரு நபர் கூட பசியுடன் இருக்கவில்லை என்பது மகத்தான பெருமைக்குரிய விஷயம். அதற்கு மக்களும் எங்களை நல்ல பலனை கொடுத்துள்ளனர் என சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜ.,வின் வெற்றியை சுட்டிக்காட்டினார்.

புலம்பெயரும் தொழிலாளர்கள் வேறு ஊர்களுக்கு இடம் மாறி செல்லும்போது, ரேஷன் பொருட்கள் வாங்க புதிய ரேஷன் கார்டு பெற தேவையில்லை. ஏற்கனவே உள்ள தங்களது ரேஷன் கார்டின் எண்ணையோ அல்லது ஆதார் எண்ணையோ எந்த ரேஷன் கடையிலும் தெரிவித்து, பயோமெட்ரிக் மூலம் அடையாளத்தை உறுதி செய்து கொண்டு, பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் புதிய ரேஷன் கார்டு பெறும் பிரச்சினைக்கும், போலி ரேஷன் கார்டு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும். தொழில்நுட்பம் அடிப்படையிலான ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தால் இது சாத்தியம் ஆகியுள்ளது.

Comments

Popular posts from this blog