Popular posts from this blog
மீண்டும் கைகோர்க்கும் முருகதாஸ்–சன் பிக்சர்ஸ் கூட்டணி...ஹீரோ யாரு தெரியும் ?
மீண்டும் கைகோர்க்கும் முருகதாஸ்–சன் பிக்சர்ஸ் கூட்டணி...ஹீரோ யாரு தெரியும் ? ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல் படமே வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் முருகதாசுக்கு மட்டுமின்றி அஜித்திற்கும் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. ஏதாவது ஒரு சமூக பிரச்சனையை மையமாக வைத்து ஆக்ஷன் படங்களை இயக்குவது தான் ஏ.ஆர்.முருகதாசின் ஸ்டைல். அப்படி அவர் இயக்கிய படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக அமைந்துள்ளன. ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்கார் போன்ற படங்களை இயக்கி உள்ளார். பல படங்களுக்கு கதை மட்டும் எழுதி உள்ளார். சில படங்களில் சிறிய ரோல்களில் நடிக்கவும் செய்துள்ளார் முருகதாஸ். கடைசியாக 2020 ம் ஆண்டு ரஜினி நடித்த தர்பார் படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. இதனால் முருகதாஸ் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வந்தது. இந்நிலையில் இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்ப உள்ளார் முருகதாஸ். இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்க உள்ளதாம். இதற்கான பேச்சுவார்த்தை முடிந்து, ஏறக்குறைய இந்த கூட்டணி மீண்டும் இணைவது உறுதியாகி விட்...
என்னது மீண்டும் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போடறாரா பூஜா ஹெக்டே?... சூப்பர்தான் போங்க!
என்னது மீண்டும் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போடறாரா பூஜா ஹெக்டே?... சூப்பர்தான் போங்க! நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்துள்ளார். இந்தியிலும் முக்கியமான படங்களை நடித்து அங்கும் சிறப்பான நாயகியாக மாறி வருகிறார். தெலுங்கில் மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன் போன்ற முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள பூஜா, சமீபத்தில் வெளியான ராதே ஷ்யாம் படத்தில் பிரபாசுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இந்தப் படத்தில் இவர்கள் இருவருக்கிடையிலான கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்ததாக அனைத்து தரப்பினரும் கூறினர். தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ஆச்சார்யா படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்துள்ளார் பூஜா ஹெக்டே. இந்தப் படத்தின் மிரட்டலான ட்ரெயிலர் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தமிழிலும் விஜய்யுடன் நடித்து இவரது நடிப்பில் பீஸ்ட் படம் கடந்த 13ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது. இந்தப் படத்திலும் நடிகர் விஜய்க்கு சிறப்பான ஜோடியாக பூஜா ஹெக்டே பாராட்டுக்குள்ளாகியுள்ளார்....
சமந்தா - பல்லாவரம் முதல் பான் இந்தியா ஸ்டார் வரை!
சமந்தா - பல்லாவரம் முதல் பான் இந்தியா ஸ்டார் வரை! நடிகை சமந்தாவுக்கு இன்று 35 வது பிறந்தநாள். இன்றைய தேதியில் சினிமாவில் நுழையும் பெண்களுக்கு ஆதர்ஷமாக இருப்பவர்களில் சமந்தா முதன்மையானவர். குறுகிய காலத்தில் இந்த இடத்தை அவர் வந்தடைந்திருக்கிறார். அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது அவரது திறமையும், துணிச்சலும் என்றால் மிகையில்லை. சமந்தாவின் அப்பா தெலுங்கர். அம்மா ஆலப்புழாவைச் சேர்ந்த மலையாளி. சமந்தா படித்ததும் வளர்ந்ததும் சென்னையிலுள்ள பல்லாவரம். தெலுங்கு, மலையாளம், தமிழ் என கலவையான பின்னணியில் சமந்தாவின் இளமை வாழ்க்கை அமைந்தது. சென்னையிலுள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியிலும் பிறகு ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலும் சமந்தா படித்தார். டிகிரி முடிக்கும் காலகட்டத்தில் மாடலிங், விளம்பரப் படங்கள் என நடிக்க ஆரம்பித்தார். அப்போது அவர் நடித்த விளம்பரங்களில் நாயுடு ஹால் விளம்பரம் முக்கியமானது. விளம்பரத்தில் சமந்தாவைப் பார்த்த மூன்றாவது நிமிடமே அவரை தனது சினிமாவில் நடிக்க வைப்பது என முடிவு செய்ததாக ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ரவி வர்மன் கூறியுள்ளார். இவர்தான் தனது மாஸ்கோவின் காவ...


Comments
Post a Comment