11 ஆம் வகுப்பு மாணவிக்கு அடிக்கடி வயிற்றுவலி! மருத்துவர் சிறுமியைப் பரிசோதித்ததில் 2 மாத கர்ப்பம்! 20 வயது மெக்கானிக் போக்சோ சட்டத்தில் கைது...
11 ஆம் வகுப்பு மாணவிக்கு அடிக்கடி வயிற்றுவலி! மருத்துவர் சிறுமியைப் பரிசோதித்ததில் 2 மாத கர்ப்பம்! 20 வயது மெக்கானிக் போக்சோ சட்டத்தில் கைது...
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அதே பகுதியில் 11 ஆம் வகுப்பு அரசு பள்ளியில் பயின்று வருகிறார். குறிப்பாக மாணவிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மாணவியின் பெற்றோர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு மருத்துவர் சிறுமியைப் பரிசோதித்ததில் சிறுமி 2 மாத கர்ப்பம் அடைந்தது தெரியவந்துள்ளது. இதனை உடனடியாக மருத்துவ நிர்வாகம் எழும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து. அதனை அடுத்து காவல் அதிகாரிகள் எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து.உடனே காவல் மருத்துவமனைக்கு சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
அப்பொழுது மாணவி பள்ளிக்கு செல்லும் வழியில் மெக்கானிக் கடையில் வேலை செய்யும் ஆண்ரோ (வயது20) என்பவர் மாணவியிடம் காதல் ஆசை காட்டி சென்னை நகர்புற பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் பல முறை சுற்றி உள்ளதாகவும் சில நாட்கள் கழித்து ஆண்ரோ என்பவர் மாணவியை வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி கூறினார். இதனையடுத்து மெக்கானிக் அன்றோவை (வயது20) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Comments
Post a Comment